பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 58% இடங்கள் மட்டுமே நிரம்பினkalvinews, kalviseithi, pallikalvi, tn kalvi, tn kalvi news, tn kalvisolai, tnkalvi, tnkalvi news, today kalvi news,


தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக், பிஆர்க். படிப்புகளில் 58 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 1.20 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.அண்ணா பல்கலைக்கழக பொறி யியல் கல்லூரிகள், அரசு பொறி யியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என தமிழகத்தில் 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.



        இவற்றில் பிஇ, பிடெக், பிஆர்க். படிப்புகளில் மொத்தம் 2 லட்சத்து 89 ஆயிரத்து 939 இடங்கள் இருக்கின்றன.இந்த கல்வி ஆண்டில் கலந் தாய்வு, தனியார் சுயநிதி கல்லூரி களில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை முடிந்து, முதலாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளும் தொடங்கிவிட்டன.

இந்த சூழலில், மொத்தம் உள்ள 2.89 லட்சம் இடங்களில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 680 இடங்கள் (58 சதவீதம்) மட்டுமே நிரம்பியுள்ளன. எஞ்சிய 1 லட்சத்து 20 ஆயிரத்து 259 இடங்கள் (42 சதவீதம்) காலியாக உள்ளன. இதில்தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் அடங்கும்.மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரி களிலும் சேர்க்கப்பட்ட மாணவர் கள் பற்றிய விவரம், அவர்களது தகுதிகள் தொடர்பானவிவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த பணி முடிந்த பிறகே, மாணவர் சேர்க்கை பற்றிய துல்லியமான தகவல் தெரியவரும் என்று மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்கக உயர் அதிகாரிகள் கூறினர்.

அண்ணா பல்கலைக்கழக கல் லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியிடங் கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. ஆனால், மொத்தம் உள்ள 553 தனியார் சுயநிதி கல்லூரிகளில் 2 லட்சத்து 74ஆயிரத்து 839 இடங்களில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 45 இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.மாணவர்கள் மத்தியில் பொறி யியல் படிப்பு மீதான ஆர்வம் குறைந்து கலை, அறிவியல் படிப்புகளில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. பொறியியல் கல்லூரி களில் சேர்க்கை குறைந்ததற்கு இதுவே காரணம் என்று ஒருசிலர் கூறுகின்றனர். புகழ்பெற்ற பொறி யியல் கல்லூரிகளுக்கு மவுசு அப்படியேதான் இருக்கிறது. மாணவர்கள், பெற்றோர் மத்தியில் பிரபலமாகாதகல்லூரிகள், குரூப்-சி நிலையிலான சாதாரண கல்லூரி கள், புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரிகளிலேயே காலியிடங்கள் அதிகம் உள்ளன என்கின்றனர் இன்னொரு சாரார்.

இதுகுறித்து ஈரோட்டை சேர்ந்த கல்வியாளர் பேராசிரியர் மூர்த்தி செல்வகுமரன் கூறும்போது, ‘‘பொறியியல் துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன. எனவே, அதிக செலவு செய்து பொறியியல் படிக்க வேண்டுமா என்று மாணவர்கள், பெற்றோர் கருதுவதால் கலை, அறிவியல் படிப்பை நாடுகின்றனர். பொறி யியல் படிப்பில் தேசிய அளவில்கூட 16.90 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது. பொறியியல் இடங்களை 6 லட்சம் அளவுக்கு குறைக்கவும் ஏஐசிடிஇ திட்டமிட்டுள்ளது’’ என்றார்.தமிழக பொறியியல் கல்லூரி களில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 25 ஆயிரம்இடங்கள் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Facebook Comment