ஆதார் அட்டை
அவசியம் குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று முக்கிய உத்தரவுபிறப்பித்துள்ளது. இதன்படி
மேலும் மத்திய அரசின் 4 திட்டங்களுக்கு
ஆதார் அட்டை அவசியமாகிறது.
பல கோடி செலவில்
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது .ஆதார் அட்டை இந்த திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது . ஆதார் அட்டையை
எந்தவொரு திட்டத்திற்கும் கட்டாயமாக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
தாக்கலானது .
இந்த வழக்கை
விசாரித்த கோர்ட் ஏற்கனவே சமையல் காஸ், ரேசன் பொருள் விநியோகம் மற்றும் சில சமூக நல திட்டங்களுக்கு ஆதார் அவசியம் என
உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு
வந்தது .இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு :
சமூக நல
திட்டங்களில் ஆதார் அட்டை அவசியம் , ஆனால் ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் சமூக திட்ட பலன் நிறுத்தக்கூடாது, மேலும் 4 சமூக திட்டங்களுக்கு ஆதார் அட்டை
அவசியமாக்கப்படுகிறது , அதாவது மத்திய
அரசின் 100 நாள் வேலை
திட்டம் , முதியோர் ஓய்வூதியம்,
பி. எப்., வங்கி கணக்கு துவக்கம் ஆகியவற்றுக்கு ஆதார்
அட்டை கட்டாயமாக்கலாம் இவ்வாறு உத்தரவில் கூறப்பபட்டுள்ளது .
Facebook Comment