ஐந்து அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச., 4ல், பள்ளிக்கல்வி
இயக்குனரகத்தை
முற்றுகையிட போவதாக, ஆசிரியர்கள்
சங்கமான, 'ஜாக்டா' அறிவித்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்
சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ'வை போல, ஜாக்டா என்ற பெயரில், சில ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம்
நடத்தி வருகின்றன.
ஜாக்டா சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னையில் நடந்தது. இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து,
சங்க ஒருங்கிணைப்பாளர்
இளமாறன் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, தமிழக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்;
பங்களிப்பு ஓய்வூதிய
திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டா போராடுகிறது. டிச., 4ல், பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை, 10 ஆயிரம் ஆசிரியர்கள் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்த உள்ளனர். பிப்ரவரி, இரண்டாவது வாரத்தில், கட்சி தலைவர்களை
அழைத்து கருத்தாய்வு மாநாடு நடத்தப்படும்; மார்ச் மாதத்தில், கோட்டை நோக்கி
பேரணி நடத்தப்படும். இவ்வாறு இளமாறன் கூறினார்.
Facebook Comment