திருவள்ளூர் மாவட்டத்தில்
ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், பதவி உயர்வு
வழங்க அக்டோபர் 26, 27, 30 ஆகிய தேதிகளில்
கலந்தாய்வு நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ்
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் 2015-16ஆம் ஆண்டுக்கு அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணி புரியும்
பட்டதாரிஆசிரியர்கள், உடற்கல்வி
ஆசிரியர்கள் நிலை-2க்கான பொது
மாறுதலும், இடைநிலை ஆசிரியர்,
உடற்கல்வி ஆசிரியர்,
சிறப்பாசிரியர்களுக்கு
பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க கலந்தாய்வும், திருநின்றவூரில் உள்ள ஜெயா மெட்ரிக்.மேல்நிலைப்
பள்ளியில் நடைபெற உள்ளன.
26-ஆம் தேதி
பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி
ஆசிரியர்கள் நிலை-2 ஆகியோருக்கு
மாவட்டத்துக்குள் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்.வரும் 27-ஆம் தேதி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு
மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். வரும் 30-ஆம் தேதி இடைநிலை, உடற்கல்வி, சிறப்பாசிரியர்களில் இருந்து பட்டதாரி
ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க கலந்தாய்வு நடைபெறும்.
Facebook Comment