ரெயிலில் பயணம் செய்யும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது. 5 வயதுக்கு மேல் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு அரை டிக்கெட் (பாதி கட்டணத்தில்) வழங்கப்படுகிறது. இந்த முறையை ரெயில்வே நிர்வாகம் தற்போது மாற்றியமைத்துள்ளது.
இதையடுத்து,
இனி அவர்களுக்கு முழு
டிக்கெட்டே வழங்கப்படும். முன்பதிவுக்கான விண்ணப்ப படிவத்தில் இதற்கான திருத்தம்
செய்யப்படுகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு
டிக்கெட் கிடையாது. அவர்கள் தொடர்ந்து இலவசமாகவே பயணம் செய்யலாம்.அதேசமயம்
முன்பதிவில்லாத (அன்ரிசர்வ்டு) பெட்டியில் பயணிப்போர், தங்களது 5 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு அரை டிக்கெட்
பெறலாம். அதில் மாற்றம் செய்யப்படவில்லை.இந்த திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் (2016)
முதல்
அமல்படுத்தப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்
என்றும் இந்திய ரெயில்வே துறை சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Facebook Comment