வானிலை மைய இயக்குனர் ரமணன், நேற்று கூறியதாவது:வங்க கடலின் தென் மேற்கு
பகுதியில் உருவான காற்று அழுத்த தாழ்வு நிலை, தற்போது, இலங்கை மற்றும் குமரி முனையில் மையம் கொண்டு
உள்ளது. இதனால், தமிழகம் மற்றும்
புதுச்சேரியில், ஒரு சில
இடங்களில், இன்றும், நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில், அடுத்த, 48 மணி நேரத்துக்கு, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை,
விட்டு, விட்டு பெய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்
Facebook Comment