TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை | TNKALVI

அடையாளம் எங்கே?
எது படித்தால் என்ன ஆகலாம்?
ஒருவர் MBBS படித்தால் மருத்துவராக வரலாம்.
ஓருவர் IAS படித்தால் கலெக்டராக வரலாம்.
ஒருவர் B.E படித்தால் பொறியாளராக வரலாம்.


ஆனால் ஆசிரியராக வேண்டுமானால் என்ன படிக்க வேண்டும்? என்றால் DEGREE +B.Ed.,D.TEd. +TET இந்த மூன்றிலும் தேர்ச்சி பெற்றால் ஆசிரியராகலாம். படித்தோம், எழுதினோம், தேர்ச்சியும் பெற்றோம் ஆனால் ஆசிரியராக வரமுடியவில்லை.
மாறாக.ஓட்டல்களில் சர்வராகவும், துணிகடைகளிலும், மளிகை கடைகளிலும், தனியார் தொழிற்சாலைகளிலும் தினக்கூலிகளாக மட்டுமே எங்களால் வாழ முடிகிறது.
ஏன் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக செல்லாமே? எனும் ஐயம் வரலாம். அங்கும் எங்களை, “ உங்களுக்கு அரசு பணி கிடைத்தது. சென்று விட்டால் மாணவர் கல்வி பாதிக்கும்?” என எந்த தனியார் பள்ளியும் எங்களை ஏற்பதில்லை.
எத்தனை முறை?
நீங்கள் சொல்லலாம் வேறு எத்தனை தேர்வுகள் வருகிறது. அதை எழுதி வேலைக்குப் போகலாமே? ” என்று, வெற்றி பெற்ற இத்தேர்விற்கு பதில் என்ன? பல முயற்சிகளை மேற்கொண்டுதான் இந்த வெற்றி. வெற்றிக்கான அங்கீகாரம் எங்கே? அனுமதி இல்லையே!
தலைமுறை பிழை
நாம் கடந்த தலைமுறைகளை உற்று நோக்கினால் வளர்ச்சியோடு இழையோடிருக்கும், ஆனால் எங்கள் தலைமுறை, எங்கள் பிள்ளைகள், கனவு, சமுதாய அங்கீகாரம் என எல்லாம் அச்சம் மட்டுமே ஆட்கொண்டுள்ளது.
எங்கள் பிள்ளைகளுக்கு நம்பிக்கை தரமுடியவில்லை. உற்றார் உறவினர் ஏளன பேச்சுக்கும், சலிப்புக்கும் ஆட்பட்டுள்ளோம். என்ன சொல்லி எங்களை சமாதானப்படுத்தினாலும் மனம் அமைதிகொள்ள மறுக்கிறது.
சான்றில்லா இதழ்
ஒவ்வொரு சான்றிதழும் எங்களுக்கு துhண், ஒவ்வொரு சான்றிழுக்கு பின்னாலும் குடும்ப உறுப்பினர்களின் இதழ்களில் பெருமிதமும், புன்னகையும் தவழ்ந்தது.
ஆனால் TET தகுதிச்சான்றிதழ் பார்க்கும் போதெல்லாம், முன் தேதியிட்ட இறப்புச் சான்றிதழாய் அச்சுறுத்துகிறது.
கல்விப்பெருமை
அனைவரும் படித்ததை பெருமைப்பட கூறி பெருமிதம் கொள்வார்கள். ஆனால் நாங்கள் படித்ததை கூச்சப்பட்டு மறைத்தால்தான் தினக்கூலி வேலையாவது உண்டு இவ்வளவு படித்த உனக்கு இங்கே வேலை இல்லை?” எனச்சொல்லிவிட்டால் என்ற அச்சத்தில்.
எங்கள் குழந்தைகளின் அறிமுக உரைகளில் என் அப்பா” “என் அம்மாஎனத் தயங்கி தயங்கியே தற்போது என்னவேலை செய்கிறோம் என்பதை கூறுகிறார்கள்.
இவ்வளவு துன்பங்களையும், அச்சங்களையும் கடந்த இரண்டு வருடங்களாக அனுபவிக்கும் நாங்கள் மரண தண்டனை பெற்ற ஒரு நபரைவிட அச்சம் கொள்கிறோம் வாழ்விற்கு.
தர்ம சிந்தனையுடன் செயல்படும் தமிழக அரசு பரிபாலனத்தில் எங்கள் குரல் கேட்குமா?
தாயுள்ளம் கொண்ட தாயே! பாரபட்சம் எங்களுக்கு மட்டும் ஏன் தாயே!
எல்லா கடவுகளையும் வேண்டுகிறோம் உங்கள் தாத்பரியம் மிக்க அரசாட்சியில் எங்களின் நினைவு வர, வளமோடுவாழ வையுங்கள் தாயே!

மு. ஜெயகவிதாபாரதி.
Share on Google Plus

About Vinoth ss

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Facebook Comment