746 பள்ளிகளுக்கு அங்கீகாரம் பறிபோகும் அபாயம்: 8 லட்சம் மாணவர்கள் குழப்பம்

தமிழகத்தில் போதிய நிலமில்லாத, 746 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம், மே, 31ம் தேதியுடன் முடிவதால், மாணவர்கள், பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.தமிழக அரசின் நிபுணர் குழு பரிந்துரையின்படி, போதிய நிலம்
இல்லாத, 746 தனியார் பள்ளிகளுக்கு, ஐந்து ஆண்டுகளாக தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டது. மீண்டும் அங்கீகாரம் வழங்க, பள்ளிக் கல்வித் துறை செயலகம் அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து, சமூக ஆர்வலர், 'பாடம்' நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.


மே, 31ல்...வழக்கு விசாரணையின் போது, 'போதிய நிலமில்லாத பள்ளிகளுக்கு, மே, 31ல் அங்கீகாரம் முடிகிறது; அதன்பின், அங்கீகாரம் நீட்டிக்கப்படாது' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வழக்கு முடிவுக்கு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, 'பாடம்' நாராயணன் சார்பில், பள்ளிக்கல்வி செயலர் சபிதாவுக்கு மனு அனுப்பப்பட்டு
உள்ளது.
அதில், 'உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்த படி, போதிய நிலமில்லாத, 746 தனியார் பள்ளிகளை மூடி, அங்கு படிக்கும் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு மேற்கொள்ள வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கு புதிய மாணவர்களை சேர்க்கக்கூடாது' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு இன்னும் முடிவு
எடுக்கவில்லை.
இதற்கிடையே, தங்கள் பள்ளிகளை செயல்பட அனுமதிக்குமாறு, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக்கல்வி செயலர் சபிதா சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'தற்போது, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடப்பதால், தனியார் பள்ளிகளை ஆய்வு செய்ய முடியவில்லை. ஜூனில், இதுகுறித்து ஆலோசனை செய்து, அரசு சார்பில் முடிவெடுக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பள்ளிகள் மாணவர்களை சேர்க்கலாமா, கூடாதா என, பள்ளிக்கல்வித்துறை சார்பில் எந்த அறிவுரையும் வழங்கப்படாததால், பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.
இன்னும் ெவளியிடவில்லைஇதுகுறித்து, தமிழ்நாடு தனியார் பள்ளி கள் கூட்டமைப்பு மாநில தலைவர் மார்ட்டின் கென்னடி கூறியதாவது:தனியார் பள்ளிகளின் நில அளவு குறித்து, அரசு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையை, தமிழக அரசு இன்னும் ெவளியிடவில்லை; அதை முதலில் வெளியிட வேண்டும். கும்ப கோணம் பள்ளி தீ விபத்துக்கு முன்பிருந்தே எங்கள் பள்ளிகள் செயல்படுவதால், அதன் பின் பிறப்பிக்கப்பட்ட அரசாணை, எங்களுக்கு பொருந்தாது.
எனவே, 746 பள்ளிகளின் நில அளவை பொறுத்து, மாணவர் எண்ணிக்கையை தமிழக அரசே நிர்ணயம் செய்து, பள்ளிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Share on Google Plus

About Vinoth ss

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Facebook Comment