கணவன் பணம் சம்பாதிக்க ஓட, குழந்தைகள் மார்க்கை தேடி ஓட ...

பொதுவாக பெண்களுக்கு
20 -25 வயதில் திருமணமாகிவிடும்


பின் கணவன், குழந்தைகள், குடும்பம், school, வேலை என நாற்பது வயது வரை மிகவும்
busy யாக இருப்பார்கள்,
நாற்பதை தொடும்போது
20 வருட குடும்ப வாழ்க்கை முடிந்திருக்கும், அஜித் மாதிரி கனவு கண்டவர்கள் எல்லாம் அப்புகுட்டி போன்றவருக்கு வாக்கப்பட்டு,
அவர் சாயலில்
இரண்டு மூன்று குழந்தைகளையும் பெற்றிருப்பார்கள்,
அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் +2 படிக்கும் வரை பின்னாலேயே சுற்றிவந்துவிட்டு college ல் கால் வைத்ததும் அவர்களுக்கு என தனியாக நண்பர்கள், அவர்களோடு வெளியே போவது அம்மாவிடம் share பண்ணிய விஷயங்கள் எல்லாம் இப்போது நண்பர்களிடம் share பண்ணுவார்கள்
அம்மாவுக்கும் குழந்தைகளுக்கும் இடையே தவிர்க்கமுடியாத ஒரு இடைவெளி உருவாகும், குழந்தைகள் வளர்ந்து வர வர அவர்களின் எதிர்காலம், படிப்பு என சிந்தனை திசைதிரும்பி கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான நெருக்கமான தருணங்களும், காதலும் ரொமான்ஸ் ம் கூட குறைந்து இரண்டு பேருக்கும் இடையேவும் ஒரு இடைவெளி உருவாகும், இருந்த தோழிகளையும் கல்யாண மேடையிலேயே கழட்டி விட்டிருப்பீர்கள்!
கணவன்
பணம் சம்பாதிக்க ஓட, குழந்தைகள்
மார்க்கை தேடி ஓட பெண்கள் மட்டும் அந்த ஆபத்தான நாற்பது வயதில் தனிமையில் இருப்பார்கள்
தன்னுடன் நேரம் செலவழிக்கவோ,
தன் சமையல் குறித்தோ தனித்தன்மை குறித்தோ பாராட்ட ஆள் இருக்காது இதுபோன்ற தனிமையில் தூக்கம் வருவது தடைபடும்
TV, phone தவிர்த்து கொஞ்சம் படித்தவர்கள் நண்பர்கள் சோல்லியோ அல்லது தனக்கே தெரிந்தோ இன்டர்நெட் பயன்படுத்த தொடங்குவார்கள்
அதிலும் Facebook போன்ற சமூக வலைதளங்கள் தான்
முதல் choice, முன்பின் தெரியாத நபர்களுடன் பொழுதுபோக்காக பேச ஆரம்பித்து நாளடைவில் அதற்கு அடிமையாகி நள்ளிரவுவரை பேச்சுக்கள் போட்டோ பறிமாற்றங்கள் என தான் என்ன செய்கிறோம் என்று உணரமுடியாத அளவுக்கு அந்த நட்பு சென்றுகொண்டு இருக்கும்
பெரும்பாலும் பெண்கள் தான் அதில் பாதிக்கப்படுகிறார்கள் நன்கு பழக்கமான நம்பிக்கையான நண்பர்களிடம் எந்த நேரத்தில் பேசினாலும் தவறில்லை, ஆனால் இதுபோன்ற சமூக வலைதளங்களுக்கு புதிதாக வருவோர் நள்ளிரவில் online ல் இருப்பது மிகுந்த ஆபத்தான ஒன்று,
பொதுவாக இரவு 10 மணிக்கு மேல் நன்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம் chat பண்ணும் பெண்களை ஆண்கள் தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர் என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும், குடும்பத்தில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாத ஒரு பெண் நள்ளிரவில் அறிமுகம் இல்லாத ஆண்களிடம் பேசவேண்டிய அவசியமே இல்லை என்பது ஆண்களின் கணக்கு, பெண்கள் குடும்ப பிரச்சனையிலோ, மனஅழுத்தத்திலோ இருக்கும் போது யாராவது ஆறுதல் சொன்னால் மனதுக்கு இதமாகத்தான் இருக்கும், அதே நேரத்தில் சொல்பவரின் உள்நோக்கம் என்ன என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்
ஆடு நனைவதற்காக
ஓநாய் ஆறுதல் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும், நள்ளிரவில் online ல் இருக்கும் பெண்களை ஆறுதல் வார்த்தை சொல்லியோ, அன்பாக இருப்பதுபோல் நடித்தோ, அழகாக இருப்பதாக பொய்சொல்லியோ, பணத்தாசை காட்டியோ, ஆபாசமாக பேசியோ
தன் வலையில் சிக்கவைக்க ஆயிரக்கணக்கான ஓநாய்கள் அலைந்து கொண்டிருக்கின்றன,
முன்பின் தெரியாதவர்களின் புகழ்ச்சிக்கு ஒருபோதும் மயங்காதீர்கள், உங்கள் குடும்பத்து பிரச்சனையில் மற்றவர்களை குளிர்காய அனுமதிக்காதீர்கள், உங்கள் தனிமைக்கு குடைபிடிக்க சாத்தான்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்,
தனிமைக்கு குடைபிடிக்கும் அதே நேரத்தில்,
உங்கள் குடும்பம்
உங்கள் மதிப்பு,
உங்கள் குழந்தைகள் எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு
நல்ல நண்பர்களை
மட்டும் உடன் வைத்துக்கொள்ளுங்கள்
உங்களின் தற்காலிக ஆறுதல் தேடல் நிரந்தரமான குடும்பத்தில் சலசலப்பை எற்படுத்திவிடக்கூடாது என்பதில் கவனம் கொள்ளுங்கள்!
Thanks to
---அஷோக்குமார் by mail me

from Shahulhameed
Share on Google Plus

About Vinoth ss

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Facebook Comment